பிரபல ஹீரோ நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்

தல அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான வேதாளம் படம் தெலுங்கில் விரைவில் ரீமேக் ஆகவுள்ளது.

Vedalam Telugu Remake

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் வேதாளம். படத்துக்கு இசை அனிருத்.

2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருந்த போதும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று ‘வேதாளம்’ ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Vedalam Telugu Remake

Vedalam Telugu Remake