வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கெட்டப் – இணையத்தில் வைரலாகும் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்

அசுரன் படத்தை தொடர்ந்து இப்படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல்.

வாடி வாசல் எனும் நாவலை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்தில் சூர்யாவிற்கு இரண்டு கதாபாத்திரங்கள் என்றும் அதில் தந்தை மற்றும் மகன் என இரு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்றும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தந்தையின் கதாபாத்திரத்தின் சூர்யாவின் லுக் இப்படி தான் இருக்கக்கூடும் என ரசிகர்கள் பேன் மேட் போஸ்டர் ஒன்றை வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் அப்படம் இதோ…

vaadivasal movie poster

vaadivasal movie poster