தளபதி 65 அப்டேட் – தளபதி படத்தில் முதன்முதலாக இணையும் ஸ்டண்ட் இயக்குனர்கள்

’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது என்று செய்திகள் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்முலம் துப்பாக்கி, கத்தி, மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாகவும், தமன் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் சண்டை இயக்குனர்களாக அன்பரிவ் இரட்டையர்கள் ஒப்பந்தமாகியள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Thalapathi 65 updates

Thalapathi 65 updates