சுஷாந்த் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ், வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைப்பு

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க மும்பை வந்த போலீஸ் அதிகாரியை சுகாதாரத்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

Sushant Singh Rajput Case

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்த்தின் தந்தை பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்ததன் அடிப்படையில், வழக்குதொடர்பான விசாரணைக்காக பாட்னா எஸ்.பி. வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று மும்பை சென்றடைந்தது. இவர்கள் சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மும்பை வந்த பாட்னா எஸ்.பி. வினேய் திவாரியை பிரிஹான் மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெளிமாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sushant Singh Rajput Case