மீரா மிதுனுக்கு சூர்யாவின் தரமான பதிலடி

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாத மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகாவை நேரடியாக தாக்கி வருகிறார்.

தொடர்ந்து இதுகுறித்து குறித்த நடிகர்கள் மௌனம் காத்து வந்தநிலையில் மீரா மிதுனுக்கு சிறந்த பதிலடி கொடுத்துள்ளார் சூர்யா.

அதில் “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..”

என குறிப்பிட்டு 2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் பதிவிட்ட ஒரு டீவீட்டை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார் சூர்யா.

2018 ம் ஆண்டு பதிவு இது
“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. “

Suriya Mass Reply To Meera Mitun