ரியல் ஹீரோ சோனுசூட்டை கண்கலங்க வைத்த வீடியோ

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக உள்ளார் நம்ம பாலிவுட் நடிகர் சோனு சூட்.

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தமை, விவசாயி ஒருவர் தனது மகள்களை ஏரில் பூட்டி உழுதது தெரிந்த உடன் அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தமை, சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை இழந்து காய்கறி கடை வைத்த இளம் பெண்ணுக்கும் சாப்ட்வேர் பணி வாங்கிக் கொடுத்தமை, மேலும் தனது பிறந்த நாளில் 3 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளமை என சோனு சூட் பலரின் மனங்களை கொள்ளை கொண்டுவருகிறார்.

இந்த நிலையில் கபில் சர்மா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சோனு சூட் கலந்துகொண்டார். அதில் வீடியோவில் சோனு சூட் அவர்களால் உதவி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உருக்கமாக அவருக்கு நன்றி தெரிவித்தனர். புலம்பெயர் தொழிலாளர்களின் நன்றி தெரிவிக்கும் இந்த வீடியோவை பார்த்து மேடையிலேயே கண் கலங்கி சோனுசூட் நின்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Sonu Sood Viral Video