என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன் – சமந்தா

பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, தன்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை நடிகை சமந்தா.

சமீபத்தில் இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக படங்கள் இவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது “எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன்.

என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன். அதனால் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Samantha Akkineni latest news updates

Samantha Akkineni latest news updates