நடன இயக்குனராகும் சாய் பல்லவி

தென்னிந்திய மொழிகளில் நடிகையாக பிரபலமான சாய் பல்லவி, அடுத்து நடன இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

நடனம் கற்றுள்ள சாய் பல்லவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவரின் படங்களில், அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் அதிகமானோர் பார்த்து சாதனை செய்த நிலையில், சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கும் லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் சாய் பல்லவி நடன இயக்குனராக பணியாற்ற இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி சாய்பல்லவியிடம் இயக்குனர் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sai Pallavi Becomes As Dance Master

Sai Pallavi Becomes As Dance Master