அல்லு அர்ஜூன் படத்தில் இருந்து விலகியது ஏன் என விளக்கம் கொடுத்துள்ள விஜய் சேதுபதி

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்க உள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தில் இருந்து திடீரென விலகினார். இதற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்தில் இருந்து விலகியதாக சமீபத்திய செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக விஜய் சேதுபதி குறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Reason for vijaysethupathi left from Allu Arjun movie

Reason for vijaysethupathi left from Allu Arjun movie