நடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் குற்றச்சாட்டு

நடிகர் சூர்யா NEET தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள திரையுலகை சேர்ந்த நடிகர் ராதாரவி சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார்.

“நீட்தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா, அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருகிறார். முழு விவரங்கள் தெரியாமல் இதுபோன்று பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும்” என்று ராதாரவி கருத்து தெரிவித்ததையடுத்து திரையுலகில் பரபரப்பு உண்டாகியுள்ளது.

Radharavi on suriya issue

Radharavi on suriya issue