நடிகை நயன்தாராவுடன் எப்போது திருமணம்? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்

தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் “காதல் எப்ப போரடிக்குதோ அப்பதான் எங்க கல்யாணம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “இணையதளத்தில் இதுவரை எங்களுக்கு 22 முறை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஆனால் எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. இதை முடிக்கணும், அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.

எங்கள் கவனம் முழுவதும் வேலையிலதான் இப்ப இருக்கு. இந்த லவ் எப்ப போர் அடிக்குதுன்னு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது கண்டிப்பா எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம் ” என தெரிவித்துள்ளார்.

nayanthara vignesh shivan photos

nayanthara vignesh shivan latest updates