கார் ஓட்டுநருக்கு எதிராக போலீசில் முறைப்பாடு செய்துள்ள நடிகை

சமீபத்தில் கோவாவுக்கு வடக்கை கார் மூலம் சுற்றுலா சென்றிருந்த நடிகை முமைத் கான் காருக்கான மீதி வாடகை தரவில்லை என கார் ஓட்டுனர்கள் சங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சமீபத்தில் 3 தினங்கள் கோவாவுக்கு வாடகை காரில் சென்றிருந்த நடிகை முமைத் கான், அங்கு மேலும் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஊர் திரும்பிய முமைத் கான், மேலதிக நாட்களுக்கான பணத்தை தரவில்லை என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள முமைத் கான், தான் முழு தொகையையும் கொடுத்துவிட்டதாகவும், இவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விசாரித்து நடவையிக்கை எடுக்குமாறும் தற்போது காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

Mumaith Khan

Mumaith Khan file case against taxi driver