துக்ளக் தர்பார் படத்தில் மஞ்சிமா மோகன் கதாபாத்திரம் இதுதானாம்

இயக்குனர் டில்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் துக்ளக் தர்பார். பார்த்திபன் வில்லனாக நடிக்கும் இந்தப்படத்தில் அதிதிராவ் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேசமயம் இந்தப்படத்தில் மஞ்சிமா மோகனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

இந்தநிலையில் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாகத்தான் மஞ்சிமா மோகன் நடித்துள்ளாராம். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறப்படும் நிலையில், தங்கை வேடம் என்றாலும் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனனுக்கு அமைந்தது போல கதைக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் மஞ்சிமா மோகன் என தற்போது கூறப்படுகிறது.

Manjima Mohan's Role In Vijay Sethupathi's Tughlaq Durbar

Manjima Mohan’s Role In Vijay Sethupathi’s Tughlaq Durbar