மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனின் பெயர்

மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், திரைப்படத்தில் தனது பெயர் குறித்த தகவல் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

இதில் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்ட மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் உங்கள் பெயரென்ன என்று ரசிகர் கேட்டதுக்கு பதிலளிக்கையில், ”சி என்ற எழுத்தில் எனது பெயர் தொடங்கும். இதற்கு மேல் சொன்னால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Malavika Mohanan Name On Master Movie

Malavika Mohanan Name On Master Movie