மோடிக்கு வாழ்த்து கூறி அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லைகா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கத்தி, 2.O, தர்பார், மாஃபியா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த லைகா நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறி அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், “பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் அவரது 70வது பிறந்தநாளான இன்று தமிழில் “கர்மயோகி” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை வழங்குவதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் பெருமைப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் எஸ் சஞ்சய் திரிபாதி அவர்கள் எழுதி இயக்கியுள்ள “கர்மயோகி” திரைப்படம் பிரதமர் மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lyca Productions Next Movie