‘காடன்’ படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் – இயக்குனர் பிரபு சாலமன்

காடன், கும்கி 2 படங்களை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.

மேலும் ராணா, விஸ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மூன்று மொழிகளில் உறுவாகியுள்ளது. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்து இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வரும் நிலையில், காடன் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாகக் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவியிருந்தன.

அதனை தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குனர் பிரபு சாலமன் ‘காடன் கண்டிப்பாக தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும். பல யானைகளுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும்.

மேலும் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தில் பணியாற்றி உள்ளார். அவர் உழைப்பையும் திறமையையும் தியேட்டரில், படத்தை வெளியிட்டால் மட்டுமே அனுபவிக்க முடியும். அதனால், ஓடிடியில் காடன் ரிலீஸ் ஆகாது. தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்” என தெரிவித்துள்ளார் இயக்குனர்.

kaadan movie will be release on theater

kaadan movie will be release on theater