கேடுகெட்ட இயக்குனர் – உன் வீட்டில உள்ளவர்களை வைத்து டீசரை போட்டு காட்டு – இரண்டாம் குத்து இயக்குனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு சர்ச்சைகளுக்குரிய திரைப்படங்கள் இளைஞ்சர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் ’இரண்டாம் குத்து’ என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே நாம் தெரிவித்தபடி தமது திரையுலக எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கறை கொண்ட பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்க மறுத்த நிலையில், திரைப்படத்தின் இயக்குனரே இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி சர்ச்சையை உண்டாகியுள்ளது.

அதனைத்தொடர்ந்து இயக்குனருக்கு எதிராக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் “படத்தின் டீசரை இயக்குனர், தனது தாய் மற்றும் சகோதரிகள் முன்னிலையில் போட்டுக்காட்டவேண்டும்” “இவ்வாறான இயக்குனர்களை தமிழ் திரையுலகம் சங்கங்களில் இருந்து விலக்க வேண்டும்” என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

irandam kuththu teaser review 2