‘இந்தி தெரியாது போடா’ டி சர்ட்டை கன்னடத்திலும் பிரபலமாகிய நடிகர்

தமிழர்களிடையே “இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்“ என்ற வாசகம் இடம் பெற்றிருந்த டிசர்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு நடிகர்கள், இளைஞர்கள், அந்த வாசகத்துடன் டிசர்ட் அணிந்து தங்களின் புகைப்படத்தை வெளியிட்டு மொழி உணர்வை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் கன்னட திரையுலகிலும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் வலுத்துள்ளது. பிரகாஷ்ராஜ் இந்திக்கு எதிரான டி சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கர்நாடக வரைபடத்துடன் கூடிய அந்த டி சர்ட்டில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்த வாசகம் இடம் பெற்றுள்ளது.

கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் பலரும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ள நிலையில், கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செய் ஆகியோரும் டி சர்ட் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் டிரண்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hindi oppose t shirt

hindi oppose t shirt