இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்களில் ஒரு சிலரே தொடர்ந்து படவாய்ப்புக்களை பெற்றுவருகின்றனர். அதில் ஒருவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

இந்நிலையில் இயக்குனர் சசி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவொன்றின்போது ’உங்களது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். படப்பிடிப்புக்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன ” என பதிவிட்டுள்ளார் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

‘சொல்லாமலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சசி தொடர்ந்து ’ரோஜா கூட்டம்’ , ‘பூ’ , பிச்சைக்காரன்’ திரைப்படங்கள் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Harish Kalyan

Bigg Boss Tamil Harish Kalyan Got Chance To Act In Director Sasi Movie