இன்னொரு ஜூலியா அனிதா சம்பத் ? – பிக் பாஸ் தமிழ் 4

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமைக்கு மாறாக இம்முறை 2 நாட்களுக்கு உள்ளாகவே போட்டியாளர்கள் மோதிக்கொள்ளும் நிலைமை பிக் பாஸ் வீட்டினுள் உருவாகியுள்ளது.

சாந்தமாக கருதப்பட்ட அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவத்திக்கும் இடையில் உருவாகியுள்ள சர்ச்சை இன்றும் தொடர்ந்துள்ளது.

நேற்றைய நிகழ்வில் அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர்கள் குறித்து சுரேஷ் சக்கரவத்தி சொன்னதாக தகவல்கள் பொய்யானவை என சமூகவலைத்தளங்களில் ரசிகர்களினால் உறுதிப்படுத்தப்ட்ட நிலையில், மீண்டும் சுரேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அனிதா சம்பத்.

சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் மீண்டும் மீண்டும் சண்டையை அனிதா வலிந்து இழுப்பது போன்றுள்ளது.

இந்நிலயில் போட்டியாளர்களில் இன்னொருவர் பாலாஜி சுரேசை எருமை மாட்டுடன் ஒப்பிட்டுள்ளமை சர்சையை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு சர்ச்சைக்கு மத்தியில் பிக் பாஸ் தலைவி அமைதி காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

bigg boss tamil 4 updates

bigg boss tamil 4 updates