மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலாம் சேவை மையத்தினர் காவல்துறையில் புகார்

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாத மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகாவை நேரடியாக தாக்கி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து பலரும் மீராமீதுன் மீது காவல்துறையில் புகார் அளித்துவரும் நிலையில், மீராமீதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுசேரி காவல் கண்காணிப்பாளரிடம் கலாம் சேவை மையத்தினர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அப்புகாரில், தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் நடிகை மீராமீதுன் , நடிகர்களின் ரசிகர்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக நடந்துகொள்வதகாக குறித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

another complaint against meera mitun

another complaint against meera mitun