2015 ஆம் ஆண்டு, இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் வெளிவந்து வெற்றபெற்ற திரைப்படம் ’பாகுபலி’.

இந்த நிலையில் ’பாகுபலி’ திரைப்படத்தின் கட்டப்பா கேரக்டரில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை தான் ராஜமவுலி முடிவு செய்திருந்ததாக ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி படத்தின் திரைக்கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆனால் சஞ்சய்தத் அந்நேரம் மும்பை சிறையில் இருந்ததால், அவரை வெளியே அழைத்துவர முயற்சி செய்ததாகவும், ஆனால் அது சாத்தியமில்லை என்று தெரிந்த பின்னரே சத்யராஜை தேர்வு செய்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கேரக்டரில் அவ்வளவு அருமையாக சத்யராஜ் நடித்து இருந்தார் என்றும், அதில் சஞ்சய்தத் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு பெயர் வாங்கி இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

kattappa role of Baahubali
Leave a Reply