ரகசியமாக நடந்து முடிந்த காஜல் அகர்வால் நிச்சயதார்த்தம்?

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாரிஸ் பாரிஸ், மற்றும் இந்தியன் 2-ம் பாகம் ஆகியபடங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது பல திருமண செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவில் தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர் ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kajal Aggarwal engagement news