எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டு சிகிச்சை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற பலரும் பிராத்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, 6வது மாடியில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் அறையில் ஸ்பீக்கர்கள் அமைத்து பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன. இவ்வாறு பாடல்களை கேட்பதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவார் என
கருதுவதால் இவ்வாறு செய்யப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

S. P. Balasubrahmanyam New Treatment

S. P. Balasubrahmanyam New Treatment