நடிகராக அவதாரம் எடுக்கும் செல்வராகவன், முன்னணி கதாநாயகியுடன் ஜோடிசேரும் ‘சாணி காயிதம்’

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பட்டியலில் இடம்பெறுபவர் செல்வராகவன். இதுவரை பல வெற்றிப்படங்களை இயக்கிய செல்வராகவன் தற்போது நடிகராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ’சாணி காயிதம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சாணி காயிதம் படத்தை ராக்கி திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார்.

மேலும் ‘சாணி காயிதம்’ படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Saani Kaayidham

New adventure of Selvaraghavan begins Saani Kaayidham