பரமக்குடியின் அருமைக் கலைஞன், புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ – கமல் குறித்து வைரமுத்து

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்துவார் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது அரசியல் கட்சி தலைவராகி இருக்கிறார்.

கமல்ஹாசனின் 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை அனைவரும் கொண்டாடிவரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதில் பாடலாசிரியர் வைரமுத்து கமல் குறித்து பதிவிட்டுள்ளதாவது: ‘பரமக்குடியின் அருமைக் கலைஞன். பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு. மரபுகடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தனிவிருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும் ‘கலையாக் கலையே கமல்’. என தெரிவித்துள்ளார்.

vairamuthu about kamal haasan