நடிகை நிக்கி கல்ராணிக்கும் கொரோனா தொற்று உறுதி

ulakai புரட்டி போட்டுவரும் கொரோனா பாதிப்பு , இந்தியாவையும் பெருமளவில் தாக்கிவருகிறது. மேலும் கொரோனா தாக்குதலுக்கு பல பிரபலங்களும் உள்ளாகி வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்த கன்னட நடிகையான நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிக்கி கல்ராணி “கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். என்னை கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும்,
முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு
எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Nikki Galrani also affected by Coronavirus

Nikki Galrani also affected by Coronavirus