எனக்கும் ‘தெளலத்’ என்ற படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – யோகிபாபு அறிவிப்பு

யோகி பாபு நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், அவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் ‘தெளலத்’ என்ற படம் விரைவில் வெளிவர இருப்பதாக யோகிபாபுவின் புகைப்படத்துடன் இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த யோகி பாபு ’இன்று இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் யோகி பாபு உச்சத்தில் இருப்பதை பயன்படுத்தி பலர் பல போலி விளம்பரங்களை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Yogi Babu latest Updates

Yogi Babu latest Updates