லோக்கடவுன் நேரத்தில் ஆர்யாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடு

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலில் இருக்கிறது.

இதற்கிடையே சில நடிகர், நடிகைகள் கொரோனா முடக்கத்திலும் சில சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் திரைப்பட நடிகர் ஆர்யா தனது நண்பர்களுடன் மழைக்கு மத்தியிலும் 80 KM சைக்கிள் சவாரி செய்துள்ளதுடன், அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இக்குழுவில் இயக்குனர் சந்தோசும் இடம்பெற்றுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சமூகவலைத்தள ரசிகர்கள், இப்படி எல்லோரும் வீதியில் இறங்கினால் நாட்டின் நிலைமை என்னவென கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Arya gets criticized for lockdown violation

Arya gets criticized for lockdown violation