கொரோனாவால் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பலி

தமிழகம் உட்பட இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலக பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வி. சுவாமிநாதன் அவர்கள் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, அதனுடே அரண்மனை காவலன், மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், வீரம் விளைந்த மண், பிரியமுடன், உன்னை தேடி, சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamil movie producer diet for corona

tamil movie producer diet for corona