விரைவில் மீரா மிதுனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படலாம்

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாத மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகாவை நேரடியாக தாக்கி பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய வெளியிட்ட வீடியோவில் தனி மனித குற்றங்களை, குறித்த ஒரு சமூகத்தினரை இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த சமூகத்தையும் சீண்டி பிரபலம் தேடும் செயல் என தெரிவிக்கப்டுகிறது.

இதனைத்தொடர்ந்து மீரா மிதுனின் ட்விட்டர் கணக்கை முடக்க பல ரசிகர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது அங்கீகரிக்கப்பட்ட [Verified] பிரபலங்களின் கணக்குகளில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மீரா மிதுனினின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்த காயத்திரி ரகுராமின் ட்விட்டர் கணக்கும், வன்முறையை தூண்டியதாக பலரால் முறைப்பாடு செய்யப்பட்டமையால் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

meera mithun twitter will be closed