கண்டிப்பாக திரையரங்கில் ரிலீசாகும் பட்டியலில் இணைந்த மற்றொரு ஹீரோவின் திரைப்படம்

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், தொடர்ந்து படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்களை தொடர்ந்து காக்டெய்ல், டேனி போன்ற படங்களும் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள.

இந்நிலையில், சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் குறித்த செய்தியை மறுத்துள்ள ’டெடி’ படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் “எங்களுடைய ’டெடி’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸாகும். கொரோனா நிலைமை சீரானவுடன் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக திரையரங்கில் ரிலீசாகும் முன்னால் ஓடிடியில் ’டெடி’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது” என்று உறுதிபடக் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ போன்ற திரைப்படங்களும் முதலில் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Another Movie Also Will Be Release On Theaters

Another Movie Also Will Be Release On Theaters