ஓடிடி தளத்தில் வெளியாகும் அப்புக்குட்டியின் திரைப்படம்

கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் பட வரிசையில் அப்புக்குட்டியின் திரைப்படம் ஒன்றும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்புக்குட்டி ‘நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் ஆன்லைன் தளத்தில் வெளிவருகிறது. இதில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்திரைப்படத்தில் நாயகனாக பாலாஜி அறிமுகமாகிறார். சசிகுமாரின் ‘கிடாரி’, கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் நாயகியான நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தின் இயக்குநர் இந்திரன், இதுவரை யாரும் பார்த்திராத வேடத்தில் வருகிறார்.

ஆகஸ்ட் 15-அன்று காலை 9 மணிக்கு ரீகல் டாக்கிஸ் ஆன்லைன் தியேட்டரில் எங்களின் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம் வெளியாகிறது. நீங்கள் தரும் ஆதரவால், எங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வாழ்வு வளம் பெறும். தமிழ் சினிமா வளரும்’ என தெரிவித்துள்ளார்.

For Booking : https://www.regaltalkies.com/?fbclid=IwAR3FoNy-V-8vC3lnVVH_dVAjgZ-amhSK6DjHsnaA3gRH_sOIaaw8kNd1E3o

 Appukutty's Onpathu Kuzhi Sambath

Appukutty’s Onpathu Kuzhi Sambath