மணிரத்னத்தை சீண்டிய இளம் இயக்குனர்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு வருகின்றனன்ர்.

இந்த நிலையில் ’திரௌபதி’ படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் “அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும், அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ..” என பதிவிட்டு மணிரத்தினம் இயக்கிய இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவற்றை கண்டிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, மணிரத்தினம் இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில்லை குறிப்பிட்டு, அதில் ‘வகையறா’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையையும் பதிவு செய்த இயக்குனர் மோகனுக்கு சமூகவலைத்தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Mani Ratnam latest news