விஜய் சேதுபதியின் சத்யா லுக் போட்ஷூட்டிங் பின்னணி

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகியிருந்தது.

அதில் சத்யா திரைப்படத்தில் நடிகர் கமல் தோற்றத்தை ஒத்ததாக இருந்த அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில் அப்புகைப்படம் குறித்த பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் சேதுபதியின் வெற்றித்திரைப்படமான தென்மேற்கு திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி இயக்குனர் மணிகண்டனின் திரைப்படத்தில் நடிப்பதாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படம் கைவிடப்பட்டது. இருந்தும் அத்திரைப்படத்துக்காக இயக்குனர் விஜய் சேதுபதியை வைத்து சில போட்ஷூட் புகைப்படங்களை எடுத்திருந்தார். அப்புகைப்படங்களில் ஒன்றே இப்புகைப்படம் எனும் தகவல் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்…….

behind  real story Vijay Sethupathi's Sathya photoshoot!

behind real story Vijay Sethupathi’s Sathya photoshoot!