அஜித் பட பாடலை பாடி குழந்தையை தாலாட்டிய சீன பிரபலம்

அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி குழந்தையை தாழ்த்திய வீடீயோவை வெளியிட்டுள்ளார் பிரபல சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி.

கொஞ்சு தமிழில் பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலானி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’நிலானி எங்கே என்று பலர் கேள்வி கேட்டனர். இவர் தான் என்னுடைய குழந்தை. எனக்கு குழந்தை பிறந்ததால் தான் நான் விடுமுறை எடுத்து உள்ளேன். அதனால் தான் தொகுப்பாளினி வேலைக்கு வரவில்லை’ என்று தெரிவித்ததுடன்

“என்னுடைய குழந்தைக்கு ’சியாவ் மன்’ என்ற பெயர் வைத்துள்ளேன். தமிழிலும் அவருக்கு ஒரு பெயர் வைக்க விரும்புகிறேன். ஒரு நல்ல தமிழ் பெயரை எனக்கு அறிமுகம் செய்யுங்கள். அதற்கான அர்த்தத்தையும் எனக்கு கூறுங்கள் ” கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி குழந்தையை தாலாட்டினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

niilani latest video