அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து , திரைத்துறைக்கு வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்கள் நடித்துள்ளவர் , அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வெங்கட் பிரபு, வைபவ், வாணி போஜன் நடித்துள்ள லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்து விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளரஇருக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Vani Bhojan

Vani Bhojan Next With This Actor