மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்

இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரவிவர்மன்.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் பேபி சாரா இணைந்திருப்பதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Baby Sara

Ponniyin Selvan updates