paththu thala

சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் கமல் பட நாயகி!

சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவர இருப்பது அறிந்ததே. இந்த நிலையில் சிம்பு தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதும் அந்த படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிடப்பட்டுள்ளது.

paththu thala

இத் திரைப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்படுகிறது என்பதும் இந்தப் படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்ததை அறிந்தோம். மேலும் இப்படத்தில் சிம்பு மட்டுமின்றி கெளதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் மட்டுமின்றி ஒருசில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் பிரியாபவானிசங்கர் சிம்பு படத்தில் இணைந்திருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக பிரியாபவானிசங்கர் இணைந்திருக்கிறார் என இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

Priya BhavaniShankar

மேலும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்ததாவது ‘இப்படத்துக்கு தாசில்தார் கேரக்டருக்கு பிரியாபவானிசங்கர் பொருத்தமாக இருப்பதாகவும் இந்த கேரக்டர் ரொம்ப போல்ட் ஆனா கேரக்டர் ஆகையால் இதற்க்கு அவர் பொருத்தமாக இருப்பார் எனவும் இந்த கேரக்டர் பிரியாபவானிசங்கருக்கு ஒரு பெரும் புகழை பெற்றுக்கொடுக்கும் என கூறியிருந்தார்.

மேலும் கன்னடத்தில் சிம்புவின் கேரக்டருக்கு ஜோடி இல்லை என்பதும் தமிழ் ரீமிக் என்பதால் ஜோடி இருக்குமா என்பது கேள்விக் குறியாகத்தான் உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் சிம்புவுக்கு ஜோடி இருக்குமா? என்று.