Dhanush
தனுஷை திரையுலகில் சிறந்த கதாநாயகனாக அறிமுகம் செய்த பெருமை அவரின் அண்ணனான செல்வராகவனுக்கே சேரும். தனுஷை வைத்து அவர் எடுத்த ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் மூலம் தனுஷின் திறமையான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தனுஷுடன் இணையும் இயக்குனர்
இந்நிலையில் நீண்ட கால இடைவெளியின் பின்னர் செல்வராகவன் தனுஷுடன் இணைந்து மீண்டும் ஓர் படத்தை இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளி வந்துள்ளன.
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தனுஷ், யுவன் சங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் மீண்டும் கூட்டணி சேர இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் செல்வராகவன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.