வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகை

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ரசிகர் ஒருவர், “ஒரு முறையாவது நீங்கள் பணியாற்ற விரும்பும் கோலிவுட் இயக்குனர் யார்?” என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், வெற்றிமாறன் என பதிலளித்ததுடன், தான் அவரின் ரசிகை என்றும் தெரிவித்துள்ளார்.

Malavika Mohanan
Leading actress willing to work with vetrimaran

Leading actress willing to work with vetrimaran