கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவராகிய பாலாஜி, தந்திரமாகவும் திறமையாகவும் விளையாடி வருவதாகவும் அவர் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலான நேரங்களில் பாலாஜி சிரித்த முகத்துடன் இருந்தாலும் அவரது சிரிப்புக்கு பின் ஒரு சோக காதல் உள்ளதாக சினேகா நாயர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “பாலா ஐந்து ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்தார் என்றும் அதன்பின் அந்த பெண்ணுடன் பிரேக்-அப். காதலித்த பெண்ணுக்கு திருமணம் நடப்பதை அறிந்து உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அவர் எந்தவித பழிவாங்கும் எண்ணமும் இல்லாமல் அவரை வாழ்த்துவதற்காக அந்த திருமணத்தில் எங்களுடன் சேர்ந்து கலந்து கொள்ள தயாராக இருந்தார் என்றும், ஆனால் அதற்குள் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததால் திருமணத்தின் போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்” என்றும் தெரிவித்துள்ளார்.