Sonu Sood

பொது மக்களால் கோவில் கட்டி வழிபடும் வில்லன் நடிகர்!

வில்லன் நடிகர் நிஜத்தில் ஹீரோவானார்!

தமிழகத்தில் ஒருசில நடிகைகளுக்கு ரசிகர்களால் கோவில் காட்டியதை அடுத்து தற்போது தெலுங்கு மாநிலத்தில் ஒரு கிராம மக்கள் வில்லன் நடிகர் ஒருவருக்கு கோவில் கட்டி வழிபடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோன வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் தமது சொந்த ஊருக்கு போக வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு தங்களது ஊருக்கு போவதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பியது மட்டுமன்றி அவர்களுக்கு வைப்புநிதி, இன்சூரன்ஸ், வேலை வாய்ப்பு உள்பட பல வசதிகளையும் செய்து கொடுத்ததில் பெரும் பங்கு வகித்தவர் வில்லன் நடிகர் சோனு சூட்.

Sonu Sood

தமிழில் அஜித் நடித்த ‘ராஜா’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ போன்ற படங்களில் மட்டுமின்றி வேறு சில தமிழ் படங்களிலும் வில்லன் காரெக்டரில் நடித்தவர் சோனுசூட் என்பது அறிந்ததே. இவர் திரையில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் தற்போது பொதுமக்களால் ஹீரோவாக போற்றப்படுகிறார்.

மேலும் வெளி நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த மாணவ மாணவிகளை சொந்த ஊருக்கு அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்ததோடு, விவசாயி ஒருவர் உழுவதற்கு தன்னுடைய 2 மகள்களை வேலைக்கு பயன்படுத்தியதை கேள்விப்பட்டவுடன் புதிய டிராக்டரை அவர் வீட்டின்முன் மறுநாளே நிறுத்தினார். அதேபோல் டெல்லியில் பணிபுரிந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் வேலை இழந்து விட்டதால் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அவருக்கு மறுபடியும் ஐடி வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தார். இது போல சோனுசூட் செய்த உதவிகள் எண்ணிக்கையில் அடங்காதது என்பது குறிப்பிடத்தக்கது.

Sonu Sood

இந்நிலையில் தெலுங்கு மாநிலமான அந்த கிராம மக்கள் கூறுகையில் ‘சோனுசூட் திரையில் வில்லனாக காட்சி கொடுத்தாலும் ஏகப்பட்ட தொழிலாளர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் என்ன செய்வதென்று அறியாத நிலையில் இருக்கும் போது உதவிய அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலே நங்கள் இந்த கோவிலை கட்டி வழிபடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்த துப்பா தாண்டா என்ற கிராமத்து மக்கள். மற்றும் கடவுளுக்கு நிகரான அவருக்கு கோவில் காட்டியதில் பெருமை கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.