விக்ரம் ரசிகன்
சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அறியத்தந்ததே. இந்த நிலையில் விக்ரம் ரசிகர் ஒருவர் அஜய் ஞானமுத்துவின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து ஒரு பதிவை முன்வைத்துள்ளது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழமையாக சில ஹீரோக்களின் ரசிகர்கள் அவர்களின் படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து சமூக வலைத்தளங்களில் வெகு விமர்சியாக பதிவேற்றி அதை ஷேர் செய்வது வழக்கம். அந்த வகையில் விக்ரம் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டரில் ஓர் பதிவை முன் வைத்து ‘கோப்ரா’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து அவர் குறிப்பிட்டதாவது ’நேத்து நைட் சரியா ஒரு 12.30 மணி இருக்கும் அஜய் ஞானமுத்து அண்ணா கனவுல வந்தாரு கிறிஸ்துமஸ் அன்னிக்கு ‘கோப்ரா’ டீஸர் வருதுன்னு சொல்லிட்டு போனாரு’ என்று பதிவு செய்துள்ளார்.
அது மட்டுமின்றி அவர் டுவிட்டரில் பதிவேற்றிய புகைப்படத்தில் அஜய் ஞானமுத்து கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் இருப்பதாகவும் பதிவேற்றியிருந்தார். இதை பார்த்த இயக்குனர் ஆச்சரியத்துடன் ‘அப்படியா சொன்னேன்?’ என அவருக்கு பதிலளித்ததுடன் முடித்து விட்டார். மேலும் ‘கோப்ரா’ படம் பற்றி அஜய் ஞானமுத்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply