கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்தவாரம் வரைக்கும் பல காரணங்களால் ரசிகர்களினால் காப்பாற்றப்பட்டு வந்த அனிதா, நேற்று ஒளிபரப்பான போட்டியாளர் ஆரியுடன் முரண்பட்ட நிகழ்வை தொடர்ந்து, சரி பிழைக்கு அப்பால், வாக்கு நிலவரத்தில் பாரிய சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிக் பாஸ் சீசன் மூன்றில், போட்டியாளர் மீரா மிதுன் அதுவரை ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுவந்த நிலையில், சேரனுடனான முரண்பாட்டை அடுத்து வாக்குகளில் பெரும் சரிவை சந்தித்து போட்டியில் இருந்து வெளியேறியிருந்தார்.
ஆக அனிதாவும் இம்முறை வெளியேறுவதக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
