பிக் பாஸ் புகழும், நடிகையுமான வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என்று பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார். இதனை அடுத்து வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த பதிவுக்கு கமெண்ட் பகுதியையும் அவர் தடை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.