makkal sevai katchi

ரஜினிகாந்த் கட்சி – மக்கள் சேவை கட்சி- சின்னம் ஆட்டோ

சூப்பர் ரஜினி புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிவருகிற 31ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை கொண்டாடிவருகின்றனர்.

சமீபத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோர் இருந்துவரும் நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்த ரஜினி “மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்ற கோ‌ஷத்தை வெளியிட்டார்.

makkal sevai katchi

மேலும் ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாபாவின் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டும் ஹஸ்த முத்திரை சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

எனினும் “ஆட்டோ” சின்னம் கிடைத்திருப்பது ரஜினிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் திருப்தியை கொடுத்துள்ளது. 1995-ம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். மேலும் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்டோக்காரன் பாட்டு மிகவும் பிரபல மானது. எனவே “ஆட்டோ” சின்னத்தை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் மிக எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்று நம்புகிறார்கள் அவரது கட்ச் உறுப்பினர்கள்.