Bigg Boss Tamil · News · News Brief

தமிழ் பிக்பாஸ் பிரபல நடிகை நடிக்கும் “பாம்பாட்டம்”

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘பாம்பாட்டம்’.

Pambaattam movie latest news

இத்திரைப்படத்தில் ‘நான் அவன் இல்லை’ ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

மேலும் முக்கியமான இளவரசி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். இத்திரைப்படத்துக்கு இனியன் ஜே ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Pambaattam movie latest news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *