ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’.
இந்நிலயில் இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
மேலும் இத்திரைப்படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார் என்று கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு காலத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த அவர் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்தவர் என்பது தெரிந்ததுவே.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
Leave a Reply