இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் – ராகவா லாரன்சை கவர்ந்த பிச்சையெடுத்து தொழிலதிபரான இளஞ்சர்

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் வேலை இன்றி வருமானம் எதுவும் இன்றி இருந்து வந்த நிலையில் , மதுரை ரயில்வே நிலையம், பின் அலங்காநல்லூர் சென்று அந்த பகுதியில் பிச்சை எடுத்து உள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிச்சை எடுத்த பணத்தில் தினமும் செலவு செய்தது போக மிச்சப்படுத்தி வைத்திருந்த பணத்தில் வாடகைக்கு வீடும் மீதியை வைத்து தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

மேலும் இதட்க்கு ஒருபடி மேலே சென்று தான் வேலை இல்லாமல் அனாதையாக சாப்பாடு இல்லாமல் கஷ்டபட்டது போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 பேருக்கு இலவசமாக வீட்டில் சமைத்து பார்சல் கட்டி சாப்பாடு தந்து கொண்டிருக்கின்றார். மேலும் எதிர்காலத்தில் யாரும் இன்றி அனாதையாக இருக்கும் முதியவர்களுக்காக ஒரு அனாதை இல்லம் கட்டி அதில் அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்றும் தெரிவிக்கிறார்.

மேலும் அவர் குறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ள “’இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” என்கிற வசனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியதாவது: இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Raghava Lawrence Latest Tweets